புது டெல்லி:
இந்தியாவின் வளர்ந்து வந்த பொருளாதாரத்தை எப்படி சீரழிப்பது என பிரதமர் மோடி அரசை பார்த்து கற்றுகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி:-
இந்தியாவில் கோடைக் காலத்தையடுத்து வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு மின்சாரத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் நிலக்கரி தடுப்பாடு நிலவுகிறது. மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சார பிரச்சனை, வேலையிழப்பு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளும் நாட்டில் நிலவுகிறது.
பிரதமர் மோடியின் 8 ஆண்டு ஆட்சி, ஒரு மோசமான நிர்வாகத்தின் மூலம் ஒரு காலத்தில் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டிருந்த நம் நாட்டை எப்படி சீரழிக்கலாம் என்பதற்கான உதாரணம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.