பாஜக-வில் தொடங்கி காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக போன்ற பெரிய கட்சிகளுக்காக பணியாற்றி, அக்கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பெரும் பங்கு ஆற்றினார். இதனிடையே, பிரசாந்த் கிஷோர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. அதை அவர் மறுத்துவிட்டர். மேலும் தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது, “பிரச்னைகளை நன்றாக புரிந்து கொள்ள உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.