இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லியின் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி :
“நாடெங்கும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு ஈகைத் திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்று பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம்.மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், இஸ்லாம் வலியுறுத்துகின்ற தன்மைகளை முஸ்லிம் சமுதாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மதவெறி, வன்முறை, சமூகக் கொடுமைகள் போன்ற மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் நீங்கி, அமைதியும், அன்பும், சமூக நல்லிணக்கமும் தழைக்கவும், பிறருக்கு ஈந்து உதவும் பண்பு வளர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் மகிழ்ச்சி பொங்கும் இந்த ஈகைத் திருநாளில் உறுதி ஏற்போம்”