மலைப்பாம்புகளுடன் நடனமாடி வியக்க வைத்த வாலிபர்

மலைப்பாம்புகள் விஷம் இல்லாதவை. ஆனால் ஆட்களையே விழுங்கி விடும் அபாயம் நிறைந்தவை. எனவே மிகப் பெரிய மலைப்பாம்பு அருகில் கவனமுடன் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கப்படுவதுண்டு.

ஆனால் அந்த பயம் இல்லாமல் இந்தோனேசியாவில் வாலிபர் ஒருவர் 2 மிகப்பெரிய மலைப் பாம்புகளை தனது தோளில் போட்டுக்கொண்டு நடன மாடியுள்ளார். அவரது இந்த நடக்காட்சி வீடியோவில் பதிவாக சமூக வலை தளங்களில் பரவியது.

20 அடி நீளம் உள்ள அந்த மலைப்பாம்புகளுடன் அவர் நடனமாடியதால் அதை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பாம்பு அருகில் சென்றபோது ஒருதடவை அந்த பாம்பு அவரை விழுங்க முயன்றது பதிவாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் லைக் பெறுவதற்காக அவர் இதை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து அதற்கு 44 ஆயிரம் லைக்குகள் தான் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.