Tamil VJ Chitra Suicide Case Update In tamil : சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. சென்னை திருவான்மயூரை சேர்ந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று சொல்லி அவரது தந்தை காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அஇந்த புகாரின் அடிப்படையில் ஹேமநாதை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹேமந்த் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹெமநாத், அவரின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்
மேலும் சென்னை பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிவந்துள்ளது. ஆனால் இதில் தொடர்புடையவர்கள் அப்போதைய ஆளும்கட்சிகாரர்கள் என்பதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த சித்ராவின் காதல் கணவர் ஹெம்நாத் தனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணம் மற்றும் அதிகார பலம் படைத்த அரசியல் மாஃபியா கும்பல் உள்ளது. சென்னையை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் பெரிய அளவில் பணம் வாங்க முயற்சி செய்கினறனர். அதற்கு என்னையும் உடந்தையாக்க பார்க்கிறார்கள்
இந்த முயற்சிக்கு நாள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கொன்றுவிடுவோம் என்று மிரட்டுவதாக கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து மீண்டும் சித்ராவின் தற்கொலை வழக்கை கையில் எடுத்த காவல்துறையினர் சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவரிடம தொடர்பில் இருந்து சினிமா, அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் யார் என்ற பட்டியலை தயார் செய்துள்ளனர்.
அதன்படி சித்ரா தற்கொலைக்கு முன்பு பெரம்பலூரில் ஒரு கிஃப்ட் சென்டர் ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பின் சித்ராவுக்கு அதிமுக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அரசு அனுமதி எதிர்நோக்கி காவல்துறையினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.