முதுநிலை பொறியியல் படிப்பு: டான்செட் ஹால் டிக்கெட் வெளியானது…

சென்னை: முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான டான்செட்  தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இணையதளத்தில்  ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் முதுநிலை (PG) பொறியியல் படிப்புகளான  எம்பிஏ, எம்சிஏ (MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan) படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) க்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  மார்ச் 30 முதல் ஏப்ரல்  ஏப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  இதையடுத்து,  TANCET தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மே 2ந்தேதி (இன்று) https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANCET ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கான முறைகள்:

https://tancet.annauniv.edu/tancet/index.html-க்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள டான்செட் அட்மிட் கார்டு பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும். அதன்பின்னர், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். அடுத்த பக்கத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.