ரஷ்யாவால் பிரித்தானியாவை கடலுக்குள் மூழ்கடிக்க முடியும் என ரஷ்ய டி.வி தொகுப்பாளர் Dmitry Kiselyov எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புடின் ஆதரவு டி.வி தொகுப்பாளரான Dmitry Kiselyov கூறியதாவது, ரஷ்யாவுக்கு பதிலடி தாக்குதல் தர பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாட்டின் அணுசக்தி படைகளை போர் எச்சரிக்கையில் வைத்துள்ளார்.
பிரித்தானியா மிகச்சிறியது, அதை அழிக்க ஒரு சர்மாட் ஏவுகணை போதுமானது. ஒரே ஒருமுறை ஏவினால், போரிஸ் ஜான்சனும் பிரித்தானியாவும் இருக்காது.
பிரித்தானியாவை அழிக்க மற்றொரு வழி, கடலுக்கு அடியில் அணு ஆயுத ட்ரோன் ஏவி, பிரித்தானியா கடற்கரைக்கு அருகே வெடிக்கச்செய்தால், அது பெரிய சுனாமி போல அலை ஏற்படுத்தும்.
ரஷ்ய எரிவாயுவைத் தடை செய்யத் தயாராக இல்லை! வெளிப்படையாக கூறிய ஜேர்மனி
அந்த அலை ஒட்டுமொத்த பிரித்தானியாவையும் மூழ்கடிக்கும் என Dmitry Kiselyov எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#UK #Russia
Dmitry Kiselyov
Putin’s mouthpiece threatened the UK with Poseidon underwater nuclear bomb.#FUCKOFF #Putin#UkasNukes pic.twitter.com/TdZ080whtJ— Johnny Jeep (@johnnyjeepjeep) May 2, 2022
இந்த ஒளிபரப்பின் போது Dmitry Kiselyov, இந்த தாக்குதலின் கிராபிக்ஸ் காட்சிகளையும் பகிர்ந்தார்.