ரஷ்யாவில் இருந்து குவியும் ஆர்டர்கள்.. வியப்பில் இந்தியர்கள்..!

ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா போர் 3ஆம் மாதத்திற்குள் நுழையும் வேளையில், இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இது இந்தியாவுக்கு அதிகப்படியான வருமானத்தை அளிப்பது மட்டும் அல்லாமல் ரஷ்யா – இந்தியா இடையேயான வர்த்தக நட்புறவு வலிமை அடைய உள்ளது.

போருக்கு பின்பு ரஷ்யா அதிகப்படியான பொருட்களை இந்தியாவிடம் இருந்து வாங்க துவங்கியது. தற்போது இதன் எண்ணிக்கையும், அளவும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

ரஷ்யா நிறுவனங்கள்

ரஷ்யா நிறுவனங்கள் சுமார் 50க்கும் அதிகமான இந்திய பொருட்களை ஏற்றுமதிக்கான ஆர்டரை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு வரலாறு காணாத உச்சத்தை எட்ட உள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை குறைந்து நாணய மதிப்புகள் மேம்படும் என எதிர்பார்க்கிறது.

குவியும் ஆர்டர்கள்

குவியும் ஆர்டர்கள்

ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் வர்த்தகத் தடை விதித்த நிலையில், ரஷ்ய மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் கிடைக்காத நிலையில், ரஷ்யா தனது முக்கியமான இறக்குமதி பொருட்களை இந்தியாவிடம் இருந்து வாங்க துவங்கியுள்ளது என TPCI குழுவின் தலைவர் விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முக்கிய நிறுவனங்கள்
 

முக்கிய நிறுவனங்கள்

ரஷ்யாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் தளமான OZON, Yandex Market, பார்மா ஸ்டாண்டர்ட், Simkodent, சில்லறை உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான X5 ரீடைல் குரூப், Uniconf எனப் பல நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்க ஆர்டர் குவித்துள்ளது.

ஏற்றுமதி பொருட்கள்

ஏற்றுமதி பொருட்கள்

ரஷ்யா இந்தியாவிடம் இருந்து எல்க்ட்ரிக்கல் மெஷின், பார்மா, பாய்லர்ஸ், இயந்திரம், இரும்பு மற்றும் ஸ்டீல், ஆர்கானிக் கெமிக்கல், வாகனம், மீன், டீ, காஃபி, ஸ்பைசஸ் ஆகியவை அதிகளவில் வாங்கி வருகிறது. இனி வரும் காலகட்டத்தில் உணவுப் பொருட்கள் பிரிவில் அதிக ஆதிக்கம் செய்யலாம்.

விலை உயர்

விலை உயர்

இதனால் இந்தியாவில் ஒருபக்கம் உற்பத்தி அதிகரித்தாலும், மறுபக்கம் உள்நாட்டு விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. காரணம் உற்பத்தி தடாலடியாக யாராலும் உயர்த்த முடியாது அது விவசாயப் பொருட்களாக இருந்தாலும் சரி, இயந்திரம் உபகரணமாக இருந்தாலும் சரி.

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

இப்படி இருக்கையில் அதிக லாபம், ஏற்றுமதிக்காக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ரஷ்யா மற்றும் இதர நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில் உள்நாட்டில் சப்ளை டிமாண்ட் பிரச்சனை உருவாகி பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 ஏற்றுமதி - இறக்குமதி

ஏற்றுமதி – இறக்குமதி

2021-22ஆம் நிதியாண்டில் இந்தியா ரஷ்யாவுக்கு 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் 8.7 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை 5.5 பில்லியன் டாலராக உள்ளது, இது 2020-21ல் 2.8 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்த நிலையில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்குத் தற்போது மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் ரஷ்யா தனது வர்த்தக நட்புறவை எந்த அளவிற்குச் சீனா இந்தியா உடன் மேம்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russian companies piling up export order in Indian companies; trade deficit may fall quickly

Russian companies piling up export order in Indian companies; trade deficit may fall quickly ரஷ்யாவில் இருந்து குவியும் ஆர்டர்கள்.. வியப்பில் இந்தியர்கள்..!

Story first published: Monday, May 2, 2022, 10:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.