வாலிபருக்கு மிரட்டல் | Dinamalar

புதுச்சேரி : வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்ராஜ், 24; இவர், கடந்த 29ம் தேதி, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பங்கேற்ற நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனை பார்த்த கருவடிக்குப்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகு (எ) ரகுவரன் என்பவர் அருண்ராஜ் பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டார். இதுகுறித்து கருவடிக்குப்பம்- இடையஞ்சாவடி ரோட்டில் நேற்று முன்தினம் நியாயம் கேட்ட அருண்ராஜை, ரகு கொலை செய்து விடுவதாக மிரட்டினார். புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ரகுவை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.