கொழும்பு :
அன்னிய செலாவணி கரைந்தது, கணக்கிலடங்காத கடன் போன்ற காரணங்களால் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இறக்குமதி பாதிக்கப்பட்டு உள்ளதால் பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இவற்றை சரி செய்ய இலங்கை அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தை விட சென்ற மாதம் மேலும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மொத்த பணவீக்க விகிதம் சுமார் 30 சதவீதத்தை எட்டியிருக்கிறது. அந்தவகையில், மார்ச் மாதத்தில் 18.7 சதவீதமாக இருந்த இலங்கையின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் 29.8 ஆக உயர்ந்துள்ளது. இதைப்போல உணவு பணவீக்கமும், 30.21 சதவீதத்தில் இருந்து 46.6 ஆக அதிகரித்து இருக்கிறது.