வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஒடிசா மாநிலத்தில் பள்ளிகளுக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.