தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாளில் அகனி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு சில இடங்களில் வெப்ப நிலை 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே 1 ஆம் தேதி 1.30 மணி நிலவரப்படி, சென்னை விமான நிலை பகுதியில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிருந்தது. இதுதவிர 5 மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. வேலூரில் 42.2 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 41.8 டிகிரி, திருச்சி, தஞ்சாவூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸூம் பதிவாகியுள்ளது.
இதுதவிர, 5 மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸூக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 39.2 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 39.1 டிகிரி, சேலத்தில் 38.6 டிகிரியும் மற்றும் மதுரையில் 38.5 டிகிரி செல்சியஸூம் பதிவாகியுள்ளது.
இதனை குறிப்பிட்ட வானிலை ஆய்வு மையம், மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. முடிந்தவரை தண்ணீர், பட்டர்மில்க், தேங்காய் தண்ணீர், பிரஷ் ஜூஸ் ஆகியவை குடித்து, உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள தெரிவித்துள்ளது.
மேலும், வெப்ப சலனம் காரணமாக, தெற்கு கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.