Flipkart Sale: வெறும் ரூ.224க்கு மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் – வாங்க இதுதான் சரியான நேரம்!

புதிய, மலிவு விலை பட்ஜெட் ஸ்மார்ட்போனை சலுகை விலையில் வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால், இப்போது உங்களுக்காக ஒரு சிறந்த போன் டெக் சந்தையில் உள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸின் புதிய Micromax IN 2C ஸ்மார்ட்போன் ஆனது Flipkart-இல் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை வெறும் 224 ரூபாய்க்கு வாங்கலாம். அது எப்படி சாத்தியம். என்னென்ன சலுகைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

Xiaomi: விற்பனைக்கு வந்த சியோமி 12 ப்ரோ; ஒன்பிளஸ் 10 ப்ரோ நிலை என்னவாகும்!

மைக்ரோமேக்ஸ் இன் 2சி விலை (Micromax IN 2C Price)

Micromax IN 2C இன் விலை ரூ.8,499 ஆக உள்ளது. அதே விலையில் Flipkart இல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். அல்லது ஸ்மார்ட் ஆக சிறந்த ஆஃபர்களுடன் வாங்கலாம். இந்த Micromax ஸ்மார்ட்போனை வாங்கும் போது Flipkart Axis Bank கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், 5% விழுக்காடு, அதாவது ரூ.425 கேஷ்பேக் கிடைக்கும். அதன் பிறகு இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.8074 ஆக இருக்கும்.

ஜியோ- ஏர்டெல் வழங்கும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்!

வெறும் 224 ரூபாய்க்கு வாங்குவது எப்படி (Micromax IN 2C Exchange Offers)

மைக்ரோமேக்ஸ்
IN 2C ஐ வெறும் ரூ.224க்கு எப்படி வாங்குவது என்று நீங்கள் யோசித்தால், இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அடங்கி உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனுக்கு ஈடாக மைக்ரோமேக்ஸ் IN 2C வாங்குவதன் மூலம் ரூ.7,850 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தினால், Micromax IN 2Cயின் விலை ரூ.224 ஆக இருக்கும்.

மைக்ரோமேக்ஸ் IN 2C அம்சங்கள் (Micromax IN 2C Specifications)

புதிய மைக்ரோமேக்ஸ் IN 2C ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன், இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரியும் கிடைக்கிறது. Unisoc T610 புராசஸர் இதில் நிறுவப்பட்டுள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் நிறுவப்படும் 4ஜி சிப்செட் இதுவாகும்.

Micromax IN 2C ஆனது 8MP பின்புற கேமரா, 5MP முன் கேமராவுடன் வருகிறது. டூயல் 4ஜி சிம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.0, Wi-Fi, 4G, டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவினையும் இந்த ஸ்மார்ட்போன் பெறுகிறது. அதுமட்டும் இல்லாமல் போனில் ஒற்றை ஸ்பீக்கர், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.