Jobs Alert: இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைகளின் பட்டியல்!

List of Government Jobs to apply for this Week: தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இதேபோல் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மற்றும் UGC-NET தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இந்த வாரத்தில் முடிவடைய உள்ளது. அவை எந்தெந்த தேர்வுகள், கடைசி தேதி எப்போது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் 

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022. இது குறித்து மேலும் தகவல் அறிய தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022 .

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் சிறப்பு அதிகாரி (Specialist Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 145 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/ வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2022

புலனாய்வு அதிகாரி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுப் பணியகத்தில் உதவி புலனாய்வு அதிகாரிகளுக்கான தொழில்நுட்பம் சார்ந்த (Assistant Central Inteligent officer- Grade II/Technical) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 150. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.05.2022

BIS நிறுவன வேலைவாய்ப்பு

இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) நிறுவனத்தில், காலியாக உள்ள பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022.

BIS நிறுவனத்தில் 276 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

உதவி கமாண்டன்ட்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள 253 உதவி கமாண்டன்ட் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் 10.05.2022.  

பேங்க் ஆஃப் இந்தியா

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் 594 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், 102 பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாகவும் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு; 696 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஓ.என்.ஜி.சி வேலைவாய்ப்பு

இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC), நிறுவனத்தில் 3,614 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022

ONGC வேலைவாய்ப்பு; 3,614 பணியிடங்கள்; ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

UGC-NET தேர்வு

தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு சுழற்சி தேர்வுகளுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ugcnet.nta.nic.in அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள், ஏப்ரல் 30 முதல் மே 30 ஆம் தேதி 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

UGC-NET 2021-22: விரைவில் தேர்வு தேதி… யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.