சூப்பர் உணவுகள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய நலன்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பீனட் பட்டர் இப்போது பெரும்பாலான இந்திய வீடுகளுக்கு வந்துவிட்டது. இதில் புரதம், ஆற்றல், கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.
சாண்ட்விச்சில் ஒரு லேயர் பீனட் பட்டரை தடவி, ருசிக்க உங்களுக்கும் பிடிக்குமா? ஆனால், உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை நாம் இவ்வளவு காலம், பீனட் பட்டரை தவறான வழியில் சேமித்து வைத்திருக்கலாம்.
பிரபல செஃப் சரண்ஷ் கோயிலா ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், பீனட் பட்டர் சேமிப்பதற்கான சரியான வழியைக் காட்டினார்.
ஒவ்வொரு முறையும் பீனட் பட்டர் ஜாடியைத் திறக்கும் போது, எண்ணெயின் அடுக்கைப் பார்க்கிறோம், இந்த எண்ணெயில் சில நமது சாண்ட்விச்களிலும் செல்லலாம். நாம் அதை நன்கு கலக்க வேண்டும்.
எனவே பீனட் பட்டர் ஜாடியை தலைகீழாக வைப்பதே சரியான வழி என்று கோயிலா பரிந்துரைத்தார். அதை வீடியோவிலும் செய்து காட்டினார். சிறிது நேரம் ஜாடியை தலைகீழாக வைத்திருந்த பிறகு, அவர் மூடியைத் திறக்கிறார், இப்போது பட்டர் சரியான நிலையில் உள்ளது.
பீனட் பட்டர் வித்தியாசமானா விஷயங்களைப் போன்றது – எப்போதும் அதை தலைகீழாக சேமித்து வைக்கவும்” என்று செஃப் கூறினார்.
நீங்கள் பீனட் பட்டரை சரியாக சேமிக்கிறீர்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“