ரியல்மி நிறுவனம், கடந்த வாரம் புதிய ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட், இயர்பட்ஸ் என தனது தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதில்,
ரியல்மி பேட் மினி
டேப்லெட்டை மே 2ஆம் தேதியான இன்று விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த டேப்லெட்டுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 4 வேரியண்டுகளில் டேப்லெட்டுகளை நிறுவனம் டெக் சந்தைக்குள் கொண்டுவந்துள்ளது. முன்னதாக, ரியல்மி பேட் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய பயனர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து புதிய ரியல்மி பேட் மினியை நிறுவனம் தற்போது சுமார் ரூ.11,999 என்ற தொடக்க விலையைக் கொண்டு விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த ரியல்மி பேட் மினி டேப்லெட்டை சிறந்த விலைக்கு வாங்க, நீங்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளராக இருக்க வேண்டும். இதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Xiaomi Pad 5: டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்ஸ்; 120Hz டிஸ்ப்ளே – இப்டி ஒரு பட்ஜெட் டேப்லெட்டா!
ரியல்மி பேட் மினி விலை (Realme PAD Mini Price India)
ரியல்மி பேட் மினி நான்கு வகைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளை சேர்த்து இதன் WiFI 3GB+32GB வேரியண்டின் விலை ரூ.8,999 ஆகவும், LTE 3GB+32GB வேரியண்டின் விலை ரூ.11,249 ஆகவும், WiFI 4GB+64GB வேரியண்டின் விலை ரூ.11,249 ஆகவும், LTE 4GB+64GB வேரியண்டின் விலை ரூ.12,749 ஆகவும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கண்ண மூடிட்டு வாங்கலாம் – மிரட்டும் அம்சங்களுடன் வெளியான மோட்டோ ஜி52!
ரியல்மி பேட் மினி அம்சங்கள் (Realme PAD Mini Specifications)
இந்திய சந்தையில் மலிவு விலை டேப்லெட் வரிசையில் ரியல்மி தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இந்த டேப்லெட்டில் 1340×800 பிக்சல் ரெசலியூஷன் கொண்ட 8.7″ இன்ச் WXGA+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த மினி டேப்லெட் Unisoc T616 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.
கிராபிக்ஸ் பெர்ஃபார்மன்ஸுக்காக Mali G57 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது. 5MP மெகாபிக்சல் கேமரா செல்பி, வீடியோ அழைப்புகள், ஆன்லைன் கல்விக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 8MP மெகாபிக்சல் முதன்மை கேமரா நிறுவப்பட்டுள்ளது. வெறும் 7.6mm தடிமன் கொண்ட அல்ட்ரா ஸ்லிம் டேப்லெட்டாக இது வலம் வருகிறது.
இந்த டேப்லெட் 4GB ரேம், 64GB மெமரி வரையிலான ஆதரவைக் கொண்டுள்ளது. புதிய ரியல்மி பேட் மினியை சக்தியூட்ட 6400mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 18W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
வைஃபை, ப்ளூடூத், 4ஜி சிம், டைப்-சி போன்ற இணைப்பு ஆதவுகளையும் இந்த டேப்லெட் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சத்தினை மேம்படுத்த டால்பி தரத்திலான இரட்டை ஸ்பீக்கர்கள் இதில் நிறுவப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி UI கொண்டு இந்த டேப்லெட் இயங்குகிறது.