அதானி குழுமத்தின் இந்த பங்கினை வாங்கியிருக்கீங்களா.. நிபுணர்களின் கணிப்பை கொஞ்சம் பாருங்க!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழுமங்களில் அதானி குழுமமும் ஒன்று. குறிப்பாக அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் லிமிடெட் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் FMCG நிறுவனமாகும்.

கடந்த சில மாதங்களில் இப்பங்கானது கணிசமான அளவு முதலீட்டாளர்களுக்கு, லாபத்தினை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி வில்மர் நிறுவனம் தொடந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, முன்னணி உணவு பிராண்டான கோஹினூரை வாங்கியுள்ளது.

கோஹினூர் பாசுமதி

அமெரிக்க நிறுவனமான மெக்கார்மிக்கின் பேஜ்கேஜ் செய்யப்பட்ட உணவு பிராண்டான கோஹினூர் பிராண்ட், மற்ற பிரபலமான பாசுமதி அரிசி பிரண்டுகளகான சார்மினார் மற்றும் டிரோபி உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இதன் மதிப்பு சுமார் 115 கோடி என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்த கையகப்படுத்தல் மதிப்பு எவ்வளவு என்பது அறிவிக்கப்படவில்லை.

ஃபார்ச்சூன் +  கோஹினூர்

ஃபார்ச்சூன் + கோஹினூர்

அதானி வில்மர் ஏற்கனவே சமையல் எண்ணெய் விற்பனையில் மிக பிரபலமானதாக உள்ளது. குறிப்பாக அதன் சமையல் எண்ணெய் பிராண்டான ஃபார்ச்சூன் ஆயில் அதானி வில்மரின் முக்கிய பிராண்டாகவும் உள்ளது. இதற்கிடையில் கோஹினூர் அரிசி பிராண்டுடன் சேர்த்து அரிசி சந்தையில் மூன்றாவது இடத்தில் அதானி வில்மர் இருக்கலாம் இனி என்றும், ஏற்கனவே ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையை செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ஜினை மேம்படுத்த உதவும்
 

மார்ஜினை மேம்படுத்த உதவும்

அகமதாபாத்தினை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், சமீப காலமாக தனது வணிகத்தினை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றது. அதற்கான துரித நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. குறிப்பாக கோஹினூரின் கையகப்படுத்தல் மேற்கொண்டு அதன் சந்தையினை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய உதவும். இது அதானி வில்மரின் மார்ஜின் விகிதத்தினை மேம்படுத்த உதவும் என எதிர்பர்க்கப்படுகிறது.

வணிக வளர்ச்சி

வணிக வளர்ச்சி

கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் அதானி வில்மரின் உணவு மற்றும் பர்சனல் கேர் வணிகம், 38% அதிகரித்து, 2621 கோடி ரூபாயாகவும் மேம்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 1905 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் அதானி வில்மர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகரியான ஆங்ஷு மல்லிக், நிறுவனம் அதன் வளர்ச்சி பாதையில் தெளிவாக உள்ளது.

 4 கட்ட திட்டம்

4 கட்ட திட்டம்

நாங்கள் எங்களது உனவு வணிகத்தினை மேம்படுத்த விரும்புகிறோம். கோஹினூர் உடனான ஒப்பந்தம் சர்வதேச அளவில் எங்களது வணிகத்தினை மேம்படுத்த உதவும். நிரந்தர வணிக வாய்ப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை எங்களது போர்ட்போலியோவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.

HUL-ஐ பிரேக் செய்த அதானி வில்மர்

HUL-ஐ பிரேக் செய்த அதானி வில்மர்

அதானி வில்மர் நிறுவனம் அதன் நிதியறிக்கையினை வெளியிட்டுள்ளது. 2021 – 22ல் இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 46.2% அதிகரித்து, 54,214 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஹிந்துஸ்தாஸன் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் விகிதம் 51,468 கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் அடிப்படையில் பார்க்கும்போது அதானி வில்மர் நிறுவனம் ஹெச் யு எல் நிருவனத்தினையும் தாண்டியுள்ளது.

லாபம் எவ்வளவு?

லாபம் எவ்வளவு?

அதானி வில்மர் நிறுவனத்தின் நிகலாபம் கடந்த மார்ச் காலாண்டில் இப்பங்கின் விலையானது 26% குறைந்து, 234 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ரஷ்யா – உக்ரைனுக்கு மத்தியில் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இது நடப்பு காலாண்டில் அதன் லாபம் அதிகரிக்கலம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதன் வணிக விரிவாக்கத்தின் மத்தியில் அதன் மார்ஜின் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு விலை அதிகரிக்கலாம்

பங்கு விலை அதிகரிக்கலாம்

அதானி வில்மர் பங்கு விலையானது ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்தோனேசியாவும் பாமாயிலுக்கு தடை விதித்துள்ளது. இதுவும் அதானி வில்மருக்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் அரிசி வணிகத்தினையும் கையகப்படுத்தியுள்ளது. ஆக இதுவும் இப்பங்கின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். ஆக இப்பங்கின் விலையானது சற்று குறையும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பங்கு நிலவரம் என்ன?

பங்கு நிலவரம் என்ன?

அதானி வில்மர் பங்கு விலையானது என் எஸ் இ-யில் கடந்த அமர்வில் 3.43% குறைந்து, 753.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 878 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 227 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் கடந்த அமர்வில் 3.41% குறைந்து, 753.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 878.35 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 221 ரூபாயாகும்.

Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani wilmar share may surge in coming weeks: says analysts

Adani wilmar share may surge in coming weeks: says analysts/அதானி குழுமத்தின் இந்த பங்கினை வாங்கியிருக்கீங்களா.. நிபுணர்களின் கணிப்பை கொஞ்சம் பாருங்க!

Story first published: Tuesday, May 3, 2022, 16:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.