தமது குழந்தைகளுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் அன்பை வழங்குபவர் அன்னை. அம்மா தம் பிள்ளைகளுக்கும், குடும்பங்களுக்கும் அள்ளித் தரும் அன்பை அளவிடவோ, மதிப்பிடவோ முடியாது. இப்படிப்பட்ட அன்னைக்கு நாம் எவ்வளவு பெரிய பரிசுகள் வழங்கினாலும் அது சிறிதாகத்தான் இருக்கும்.
எனவே இந்த அன்னையர் தினத்தன்று உங்களது அம்மாவுக்கு நீங்கள் இப்படியும் மறக்க முடியாத மிகவும் பயனுள்ள 6 பரிசுகளை வழங்கலாம்.
எத்தனை நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கலாம்.. திக்குமுக்காட வைக்கும் ஐடி நிறுவனம்!
உடல்நலப் பரிசோதனை
இளமையாக ஆரோக்கியமாக உள்ளவர்களே ஆண்டுக்கு 1 முதல் 3 முறை வரை உடல்நலப் பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனவே வர இருக்கும் அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவிற்கு உடல்நலப் பரிசோதனையைச் செய்துவிடுங்கள். இதற்கு உங்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையில் மட்டுமே செலவு ஆகும். உடல்நலப் பரிசோதனைக்கு செலவாகும் தொகையில், 5 ஆயிரம் ரூபாய் வரை, வருமான வரி சட்டப்பிரிவு 80D கீழ் வரி விலக்கும் பெறலாம்.
நிதி ஆலோசகர்
அம்மாக்கள் வீட்டில் எப்போதும் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுக்குத் தெரியாமல் பணத்தைச் சேமித்து வைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அதை முறையாகச் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதை இரட்டிப்பாக்கத் தெரியாது. எனவே உங்கள் அன்னைக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல நிதி ஆலோசகரைப் பரிந்துரைத்து அவரிடம் உள்ள பணத்தைச் சேமிக்க, முதலீடு செய்ய உதவலாம். சில நிதி ஆலோசகர்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொருத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையில் கட்டணமாகப் பெறுவார்கள்.
எஸ்.ஐ.பி
உங்கள் அம்மாவிடம் முதலீடுகள் செய்யும் அளவிற்குப் பணம் இல்லை என்றால் அதை அவர்களுக்காக நீங்களே செய்யலாம். உங்கள் அம்மாவின் பெயரில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்.ஐ.பி மூலமாகவோ அல்லது மொத்தமாகவோ முதலீடு செய்ய உதவலாம்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு
உங்கள் அம்மா 60 வயதுக்கும் அதிகமானவர் என்றால் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்களை திணிக்க வேண்டாம். அதைத் தவிர்த்து மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் கணக்கைத் திறந்தால், 7.4 சதவீதம் அளிக்கப்படும். ஒரு முறை இந்த திட்டத்தில் முதலீடு செய்துவிட்டால் அதற்கு முதிர்வு காலம் வரை வட்டி விகிதம் குறையாது. அதிகபட்சம் இந்த சேமிப்பு திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா
ஓய்வு காலத்தில் உள்ள முதியவர்களுக்கு எல்.ஐ.சி பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் கீழ், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வழங்குகிறது. 10 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது மாதத்திற்கு 7.40 சதவீதம் வரை ஓய்வூதியமாகக் கிடைக்கும். 10 ஆண்டுகள் பென்ஷன் பெற்று முடிந்தால் முதலீட்டுத் தொகையும் திரும்பக் கிடைக்கும். குறைந்தது 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். ஓய்வூதியம் கிடைக்கும். முதலீட்டுத் தொகையும் முதிர்வு பெரும் போது திரும்ப வந்துவிடும். எனவே உங்கள் அம்மாவிற்கு அருமையான இந்த ஓய்வூதியம் திட்டத்தைப் பரிசாக வழங்கலாம்.
தங்கப் பத்திரங்கள்
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் அதிக தங்க நகை ஆபரணங்களுடன் இருப்பது பாதுகாப்பானது அல்ல. எனவே தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து சவரன் தங்கப் பத்திரம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் பத்திரமாகத் தங்கம் வாங்கும் போது கிராமுக்கு 50 ரூபாய் குறைவாக வாங்கலாம். திருட்டு பயமும் இருக்காது. ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி விகிதமும் லாபம் கிடைக்கும். குறைந்தது 5 ஆயிரம் முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் கோல்டு ஈடிஎப், மியூச்சுவல் ஃபண்டுகளும் உள்ளன.
6 best money gifts for mom on Mother’s Day
6 best money gifts for mom on Mother’s Day | அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவுக்குப் பரிசு அளிக்க சூப்பர் ஐடியா!