அருள்நிதியின் 'தேஜாவு' படம் கோடை வெளியீடு
நடிகர் அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கும் புதிய படம் 'தேஜாவு'. அருள்நிதிக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். அருள்நிதி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராம்ஜான் பண்டிகையையொட்டி இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .