ரஷ்ய ஜனாதிபதியான புடின், ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பை நாட்டின் பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு, நேரடியாக தானே உக்ரைன் ஊடுருவலை முழுமையாக பொறுப்பேற்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
புடினுக்கு வயிற்றுப் புற்றுநோய் இருப்பதாகவும், அவர் ஏப்ரல் மாத இறுதியில் அறுவை சிகிச்சைக்குச் செல்ல இருப்பதால், உக்ரைன் போர் பொறுப்பை பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவரும், முன்னாள் உளவுத்துறை தலைவருமான Nikolai Patrushev என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும் முன்பு ஒரு தகவல் வெளியானது.
ஆனால், அந்த அறுவை சிகிச்சை த்ற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 9ஆம் திகதி நடைபெற இருக்கும் ரஷ்யாவின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு முன் அந்த அறுவை சிகிச்சை இருக்காது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் ஊடுருவல் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் புடின் எதிர்பார்த்த நேரத்துக்குள் வெற்றிகரமாக உக்ரைனைக் கைப்பற்றாததால், இப்போது தானே நேரடியாக உக்ரைன் போரை பொறுப்பேற்க இருக்கிறாராம் புடின்.
இந்த தகவலை Eurasia Group என்னும் அரசியல் ஆலோசனை அமைப்பின் தலைவரான Mujaba Rahman என்பவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை ஆட்சி செய்யும் பொறுப்பை, நாட்டின் பிரதமரான Mikhail Mishustinஇடம் ஒப்படைத்துவிட்டு, தானே முழுமையாக உக்ரைன் போரை பொறுப்பேற்க இருக்கிறாராம் புடின்.
ஆனால், இன்னமும், சாத்தியமற்ற விடயங்களை சாதிக்க அவர் விரும்புவதாக தெரிகிறது. அதாவது, உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி பிறந்த ஊரான Kryvyi Rih என்ற நகரைக் கைப்பற்ற அவர் விரும்புகிறாராம், அதுவும் மே மாதம் 9ஆம் திகதிக்குள்…
சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழும் ஒரு நகரை, ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து சுமார் 25,000 படை வீரர்களை இழந்த ரஷ்யப் படையால் கைப்பற்ற முடியுமா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாகும்.
ஆனால், அதையெல்லாம் புரிந்துகொள்ளும் மனநிலைமையில் புடின் இல்லை என்பதுதான் இப்போது பெரிய பிரச்சினை.