வயலில் வேலை செய்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 18 பேர் ஜுஸ் குடித்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நடவு பணியில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் உட்பட 18 பேர் வாந்தி, மயக்கத்தால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். உள்ளூர் கடையில் ஜூஸ் வாங்கி குடித்த 24 பேரில் 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூஸ் கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள வலையாம்பட்டு பகுதியில் குமரேசன் என்பவர் தனது விளைநிலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த தயாளன் என்பவரின் கடையில் பழச்சாறு வாங்கி கொடுத்துள்ளார்.
இதனை குடித்த பெண் தொழிலாளர்களின் குழந்தைகள் இருவர் உட்பட 18 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் அனைவரையும் வலையாம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்