சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த சப்ளை செய்யும் பொருட்கள் இந்தியாவில் பலவும் உள்ளன. குறிப்பாக தடுப்பு மருந்து ஏற்றுமதியில் 60%மும், பொதுவான மருந்துகள் ஏற்றுமதியில் 20%மும் இந்தியா பங்கு வகிக்கிறது.
அந்தளவுக்கு மருந்து ஏற்றுமதியில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையின் படி, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 8 ஆண்டுகளில் 103% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறந்த ஏற்றுமதியாளர்
கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் மட்டும் 83,422 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தளவுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதியாளராக இருந்தாலும், இந்தியாவில் சில சிக்கலும் நிலவி வருகின்றது.
சரக்கு இருப்பு காலம்
இது குறித்து சர்வதேச அளவிலான சப்ளை சப்ளை சங்கிலி தர நிலை அமைப்பான GS1, ஒரு ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. இது சரக்கு இருப்பு காலம் ( inventory period) சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்கள் 64 நாட்களை கொண்டுள்ளன. இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது இந்திய நிறுவனங்கள் 98 நாட்களை கொண்டுள்ளது.
செலவு அதிகம்
மேலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த சப்ளை சங்கிலி, லாகிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கான செலவினம் 15 சதவீதம் அதிகம் என GS1 ஆய்வறிக்கை கூறுகின்றது. இந்தியா மருத்துவ துறையில் முன்னணியில் இருக்கும் நிலையில், மேற்கண்ட பிரச்சனைகள் களையப்படும்போது இன்னும் சிறந்து விளங்கலாம் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
என்னென்ன சவால்கள்
இந்திய மருத்துவ சந்தையில் தற்போது உள்ள சவால்களில், சப்ளை சங்கியில் உள்ள பிரச்சனை, போலி மருந்துகள் மற்றும் பொருட்கள் திருட்டு, செலவினங்கள், மருந்துகள் வீணாதல் , மருந்துகளில் உள்ள பிழைகள், சரியான நேரத்தில் சரியான நோயாளிகளுக்கு கிடைக்காதது என பல பிரச்சனைகள் நிலவி வருகின்றது.
மருந்துகள் வீண்
குறிப்பாக இந்தியாவில் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவ உற்பத்தியாளர்கள், மருந்துகள் எக்ஸ்பெய்ரி மற்றும் திருட்டின் மூலம் மொத்த உற்பத்தியில் 1 சதவீதத்தினை இழப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் தரமற்ற போலி மருந்துகளும் பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளன. இது தரமான மருந்துகளில் இருந்து அடையாளம் காண முடியாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
போலியான மருந்துகள்
போலியான மருந்துகளின் வளர்ச்சி விகிதமான மருத்துவ சந்தையில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பின்னர் இது பன்மடங்கு பெருகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
வளர்ச்சி எதிர்பார்ப்பு
இதற்கிடையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மருத்துவ வளர்ச்சியானது நல்ல முன்னேற்றத்தினை கண்டுள்ளது. இது கடந்த 2016 முதல் 16 சதவீத வளர்ச்சியினைக் கண்டு வருகின்றது. இந்த துறையானது சந்தை மதிப்பில் 2030ம் ஆண்டில் 65 லட்சம் கோடி ரூபாயினை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் மருத்துவ துறையில் உள்ள பிரச்சனைகள் களையப்படும்போது, மருந்து நிறுவனங்கள் இன்னும் சர்வதேச அளவில் மிகப்பெரிய வளர்ச்சியினை காணலாம்.
india’s pharma logistics, ware housing costs 15% higher than other countries: GS1 report
india’s pharma logistics, ware housing costs 15% higher than other countries: GS1 report/இந்தியாவில் இப்படியொரு பிரச்சனை இருக்கா.. புலம்பும் பார்மா நிறுவனங்கள்..!