சென்னை:
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவரை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது உயரிழந்தார். இது தொடர்பாக மூன்று காவல் துறையை சேர்ந்தவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது சென்னையில் கைது செய்யப்படக் கூடிய குற்றவாளிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என டி.ஜி.பி. ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதனுடைய அடிப்படையில் அந்தந்த மாவட்ட காவல் துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் காவல் நிலையங்களில் கைதிகளை இரவில் வைத்து விசாரணை நடத்த கூடாது என்றும், கைது செய்யப்பட்ட உடன் உடனடியாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முறையாக சிறையிலடைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.