இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சரிகட்ட இந்தியா மேலும் ஆயிரத்து 530 கோடி ரூபாய் கடன் உதவியை வழங்கி உள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே இந்தியா வழங்கிய 200 மில்லியன் டாலர் கடன் உதவியைக் கொண்டு இந்த மாதத்திற்கு 4 தவணையாக எரிபொருள் வாங்க உள்ளதாக இலங்கை மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சனா விஜெசேகரா தெரிவித்தார்.
அதுபோக கூடுதலாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் உதவி கேட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.