உக்ரைன் போரில் உண்மையான மரண எண்ணிக்கை எவ்வளவு? ஐ.நா. அதிகாரப்பூர்வ தகவல்| Dinamalar

கீவ்: உக்ரைன் போரில் உண்மையான மரண எண்ணிக்கை எவ்வளவு என ஐநா., மனித உரிமை ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் பலியாகி உள்ளனர்.

உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்களின் மரணம் குறித்த சரியான தகவல்களை வெளியிட மறுக்கின்றன.
அப்பாவி குடிமக்கள் பலர் இந்த ராணுவ தாக்குதலில் பலியாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஐநா., மனித உரிமை ஆணையம் எத்தனை குடிமக்கள் இந்த போரில் இறந்தார்கள் என்று தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதனையடுத்து தற்போது ஐநா., சார்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 153 குடிமக்கள் இந்த போரில் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

latest tamil news

நிமிடத்துக்கு நிமிடம் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இந்த நிமிடத்தில் மரண எண்ணிக்கை மேலும் கூடியிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஐநா தகவல் அளித்து உள்ளது. பெரும்பாலான மக்கள் வெடிபொருட்கள் தாக்குதல், ஏவுகணைத் தாக்குதல், வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் பலியாகி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.