உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என்றும் போப் பிரான்சிஸ் பலமுறை கண்டித்துள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது:-
உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க நான் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். இதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பினேன். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதின் இந்த நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை என தெரிகிறது.
நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்