உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்:
உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரம்ஜான் விழா சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் மாளிகையில் ரம்ஜான் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிபர் ஜோபைடன் கூறியதாவது:-
இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லோராலும் இதை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். பல்வேறு நாடுகளிலும் நிலவும் வறுமை, வன்முறை, நோய் பரவல் காரணமா இந்த நிலை உள்ளது.
உலகம் முழுவதும் அமைதி நிலவுவதற்கான அறிகுறிகள் உள்ளன. உலகம் வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. பல நாடுகளில் அமைதியாக ரம்ஜான் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் அதே சமயத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் நீடிப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களால்தான் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா வலிமை பெற்று வருகிறது. அவர்களது உழைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.
இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான். சர்வதேச அமைப்புக்கு நான் இஸ்லாமியரைத்தான் தூதராக அமைத்துள்ளேன்.
உலகிலேயே அமெரிக்கா தான் மதம், இனம், பூகோல அமைப்புப்படி இல்லாமல் வரலாற்று ரீதியிலான அடிப்படையில் இயங்கி வரும் ஒரே நாடாகும். இஸ்லாமியர்களுக்கு அதில் முக்கிய பங்கு உண்டு.
இவ்வாறு அதிபர் ஜோபைடன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.