நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில், மின் துறைக்கு மட்டும் 617.2 லட்சம் டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 534 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது.
2020-2021ஆம் ஆண்டில் 7ஆயிரத்து160 லட்சம் டன்னாக இருந்த மொத்த நிலக்கரி உற்பத்தி, 2021-2022ஆம் ஆண்டில் 8.55சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த நிலக்கரி ஏற்றுமதி 8ஆயிரத்து 180 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.