உக்ரைன் நாட்டின் ஒடெசா நகர் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காணொலியில் பேசிய அவர், ஒடெசா நகரில் உள்ள மாணவர்களின் விடுதி மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
ரஷ்ய படைகளின் தாக்குதலினால் கட்டிடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. சேதமடைந்து தீப்பற்றி எரியும் தீயின் நடுவே தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.
முன்னதாக, ரஷ்ய படைகள் அங்குள்ள ஒரு தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.