நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான
ரிலையன்ஸ் ஜியோ
, ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டும் இல்லாமல், அதிரடி போஸ்ட்பெய்ட் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், நிறுவனத்தின் திட்டமானது டேட்டா, இலவச அழைப்புகளுடன் OTT நன்மைகளையும் வழங்குகிறது.
நிறுவனத்தின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் உள்பட பல OTT தளங்களுக்கான அணுகலை வழங்குகின்றன. எனினும், நிறுவனத்தின் மலிவான போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை வெறும் ரூ.399 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் (jio 399 postpaid plan)
ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறந்த திட்டத்தை ரூ.399 என்ற விலையில் வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு மாதத்திற்கு 75 ஜிபி இணைய டேட்டாவைப் பெறுவார்கள். இந்த டேட்டா தீர்ந்த பிறகு, பயனர்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10 அதிகமாகச் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டதில், நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இதில் கூடுதலாக, OTT நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தில் Netflix, Amazon Prime வீடியோ, Disney+ Hotstar ஆகியவற்றுக்கான இலவச அணுகல் கிடைக்கின்றன.
ஜியோவைத் தவிர, போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இந்த அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜியோவின் இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ஜியோவின் ரூ.666 பிரிப்பெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio 666 prepaid recharge plan)
தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.666 விலையில் அருமையான ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் 84 நாள்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் மொத்தம் 126 ஜிபி அதிவேக டேட்டாவை கிடைக்கிறது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளை வழங்குகிறது.
ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் இந்த திட்டம் வழங்குகிறது. குறைந்த விலையில் OTT நன்மைகளுடன் வரும் திட்டங்களை தேடுகிறீர்கள் என்றால், இந்தத் திட்டங்களைத் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
ரீசார்ஜ் செய்யும் முன்னரோ அல்லது திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னே திட்ட விவரங்களை சரியாக படித்துப் பார்த்து தேர்ந்தெடுக்கவும். திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், சேவை மையத்தை அணுகவும்.