ஓ…பார்ட்டி நல்ல பார்ட்டி தான்…! நேபாளத்தில் ராகுல்: வீடியோ வைரல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காத்மண்டு: நேபாளத்திற்கு சென்றுள்ள ராகுல், அங்கு பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நண்பரும் தனியார் செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேபாள் தலைநகர் காத்மண்டுக்கு ராகுல் 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். சும்நிமா உதாஸ் என்பவர் நிமா மார்ட்டின் ஷெர்பாவை மே 5ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதில் கலந்து கொள்ள காத்மண்டு சென்றுள்ள ராகுல் அங்குள்ள மேரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டியில் ராகுல் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.