”கட்சத்தீவை மீட்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை” என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் புதிதாக மாற்றப்பட்ட தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், ”இலங்கை தமிழர்களின் நலனில் பாஜக எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. தமிழைப் போன்று சமஸ்கிருதமும் உன்னதமான மொழிகளில் ஒன்று.
45 நாட்களில் பஞ்சு இறக்குமதி அதிகமாகும். பஞ்சின் விலை கட்டுப்படுத்தவும் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கட்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று. மிக விரைவில் கட்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒன்றாகும்” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM