கர்நாடகாவில் பாஜக தலைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் எனவும் தகவல்கள் பரவி வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகா சென்றடைந்தார்.
பெங்களூரு சென்றடைந்த அமித் ஷாவை கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதற்கு முன் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றபோது கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெறவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அமித் ஷாவின் பயணம் அரசுமுறை பயணமாக இருந்தாலும் அவர் மூத்த தலைவர்களை சந்தித்து கட்சி தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளதா என்பதை பற்றியே ஆலோசிக்கவிருப்பதாக தெரிகிறது. அமித் ஷா ஆந்திராவில் பல்வேறு விழாக்களில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இதையும் படிக்கலாம்: ‘நான் “பூ ” அல்ல “நெருப்பு “.. பிரதமர் அலுவலக கோட்சேக்களே..’ – எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM