பெரு நாட்டில் கார் விபத்தொன்றில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள், அவர்களது உறவினர்களான மூன்று உறவினர்கள் படுகாயமடைந்தார்கள்.
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும்போது Rosa Isabel Cespede Callaca (36) என்ற அந்த பெண்ணின் சவப்பெட்டிக்குள்ளிருந்து, சவப்பெட்டியின் மூடியை படபடவென தட்டும் சத்தம் கேட்க, பதறிய உறவினர்கள் அவசர அவசரமாக சவப்பெட்டியைத் திறக்க, அங்கே அந்தப் பெண் கொட்டக் கொட்ட கண்களை விழித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
உடனடியாக Rosaவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உயிர் இருப்பதைக் கண்டு, அவரை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்துள்ளார்கள்.
ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு Rosaவின் உயிர் பிரிந்துவிட்டிருக்கிறது.
உயிரிழந்த Rosa உயிருடன் வந்ததால் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திளைத்திருந்த அவரது உறவினர்கள், மீண்டும் அவர் இறந்துபோனதால் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
விபத்தில் சிக்கிய Rosa கோமா நிலைக்குச் சென்றிருக்க, மருத்துவமனை ஊழியர்கள் அவர் உயிரிழந்ததாக தவறாக முடிவு செய்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவால் இது நிகழ்ந்ததா என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.