கிரிப்டோகரன்சி தான் மாஸ்.. புதிய பேமெண்ட் சேவை அறிமுகம் செய்த டெலிகிராம்..! Toncoin

என்ன தான் கிரிப்ரோகரன்சி குறித்து அதிகப்படியான வெறுப்பு கருத்து பதிவிட்டு, கட்டுப்பாடுகளை விதித்தாலும்.. இளம் முதலீட்டாளர்கள், தொழில்நுட்பம் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்து பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி மீது அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படிக் கிரிப்டோகரன்சி மீது தீரா காதல் கொண்டவர்களைக் குஷிப்படுத்தும் வகையில் டெலிகாரம் செயலி தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்காகக் கிரிப்டோகரன்சி வாயிலாக இயங்கும் புதிய பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. #Toncoin

அதானி குழுமத்தின் இந்த பங்கினை வாங்கியிருக்கீங்களா.. நிபுணர்களின் கணிப்பை கொஞ்சம் பாருங்க!

டெலிகாரம் செயலி

டெலிகாரம் செயலி

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் துபாயில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் டெலிகாரம் மெசேஜிங் செயலி சுமார் 58 மொழிகளில் தனது உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது. டெலிகாரம் செயலியை அதிகமானோரால் பயன்படுத்தாவிட்டாலும், உலகளவில் பிரபலமாகவே உள்ளது, ஆனால் இனி மிகப்பெரிய உச்சத்தை டெலிகராம் அடைய உள்ளது. எப்படித் தெரியுமா..?

டான்காயின் பேமெண்ட்

டான்காயின் பேமெண்ட்

டெலிகிராம் நிறுவனம் கைவிடப்பட்ட பிளாக்செயின் திட்டத்தைக் கையில் எடுத்த ஒரு சிறிய குழுவின் முயற்சியால் தற்போது டான்காயின் (Toncoin) என்னும் புதிய கிரிப்டோகரன்சி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த டான்காயின் பயன்படுத்தி டெலிகராம் மெசேஜிங் செயலியில் இருந்து பணத்தை அனுப்ப முடியும்.

இலவச பேமெண்ட்
 

இலவச பேமெண்ட்

இதுக்குறித்து டெலிகாரம் நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் TON (தி ஓபன் நெட்வொர்க்), டெலிகிராம்-ல் இப்போது டான்காயின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை எந்தக் கட்டணமும் இல்லாமல் செய்ய முடியும் என அறிவித்து உள்ளது.

பேமெண்ட்

பேமெண்ட்

 

இதுவரையில் கிரிப்டோகரன்சி பேமெண்ட் பெரிய அளவில் பயன்படுத்தாத நிலையில் டெலிகிராம் போன்ற பிரம்மாண்ட மெசேஜிங் செயலி கிரிப்டோகரன்சி பேமெண்ட்-க்காகச் சிறப்பு வேலெட்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் டான்காயின் (Toncoin) வாயிலாகப் பணத்தைப் பெறவும், அனுப்பவும் முடியும்.

SEC அமைப்பு

SEC அமைப்பு

2020ல் இந்தக் கிரிப்டோகரன்சி பேமெண்ட் சேவையை முன்வைக்கும் போதும் அமெரிக்காவின் SEC அமைப்புக் கடுமையாக மறுத்தது. ஆனால் இந்தத் திட்டத்தை ஒரு சிறிய குழு தலைமையில் ஆய்வு செய்து பல்வேறு மாற்றங்களைச் செய்து TON – தி ஓபன் நெட்வொர்க் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது டெலிகிராம்.

Telegram Open Network

Telegram Open Network

இந்த டான்காயின் உண்மையான பெயர் TON – Telegram Open Network இதில் உருவாக்கப்படும் கிரிப்டோகரன்சி பெயர் GRAM. இதை 2018ல் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் இணைந்து உருவாக்கினர். இந்த GRAM காயினில் pre-Initial Coin Offering-ல் (ICO) 1.7 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாஸ் தான்

மாஸ் தான்

பல தடைகளுக்குப் பின்பு ரீடைல் பணப் பரிமாற்றங்கள் சேவை துறையில் டெலிகிராம் மிகவும் முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரையில் எந்த ஒரு தனி நிறுவனமும் ரீடைல் பேமெண்ட்-ஐ கிரிப்டோகரன்சியில் அறிமுகம் செய்தது இல்லை.

 இன்று ஒரு டான்காயின் விலை 1.37 சதவீதம் சரிந்து 1.84 டாலராக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Telegram introduced new crypto payment facility; Users Can Send and Receive Toncoin

Telegram introduced new crypto payment facility; Users Can Send and Receive Toncoin கிரிப்டோகரன்சி தான் மாஸ்.. புதிய பேமெண்ட் சேவை அறிமுகம் செய்த டெலிகிராம்..! Toncoin

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.