வரலாறு காணாத கோடை வெப்பம் காரணமாக நாட்டில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக கோதுமை விலை ஏற்றம் கண்ட நிலையில், கோடை வெப்பம் காரணமாக அதன் சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 111 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், மார்ச் மாதத்தில் இருந்து வீசிய வெப்பக்காற்று காரணமாக இந்த உற்பத்தியானது 105 மில்லியன் டன்னாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்தியாவில் கோதுமை உற்பத்தி 6சதவீதம் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையில், வெப்ப அலை காரணமாக 20சதவீதம் அளவுக்கு கோதுமை சாகுபடி குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவும் குறையக் கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் அதிகளவில் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.