சிறைசாலைகளில் பாதுகாப்பு: மத்திய அரசு அறிவுரை| Dinamalar

புதுடில்லி: தேச விரோத செயல்களுக்கான இடமாக சிறைச்சாலைகள் மாறிவிடாதபடி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட உள்துறை செயலர் மற்றும் சிறைத்துறை டிஐஜி.,க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

*தேச விரோத செயல்களை அரங்கேற்றும் இடமாக சிறைச்சாலைகள் மாறிவிடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*சிறைச்சாலைகளில் அடிக்கடி சோதனை செய்வதுடன், பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், சிறப்பான நிர்வாகத்தையும் உருவாக்க வேண்டும்.

*தண்டனை முடிந்து வெளியேறும் கைதிகள், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, பொறுப்பான குடிமகனாக மாறுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

*கைதிகளை சிகிச்சைக்கு வெளியே அழைத்து செல்வதை தடுக்கும் பொருட்டு, சிறைச்சாலைகளில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதுடன், நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்வதற்கு கைதிகளுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.

*சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தம் தொடர்பாக பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க, தகுதியான பயிற்சி மையத்தை கண்டறிய வேண்டும்

*சிறைச்சாலைகளில், அதிகாரிகள் ஊழல் செய்வதை தடுக்கும் பொருட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

*சிறை ஊழியர்கள் தேவையில்லாமல், சிறைச்சாலைக்கு வெளியே சென்று வருவதை தடுக்கும் பொருட்டு, அவர்கள் வெளியே செல்வதையும், உள்ளே வருவதையும் குறித்து வைத்து பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.