மூலப்பொருட்கள் தட்டுப்பட்டால் மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்கள் வாகன உற்பத்தி ஏப்ரல் மாதம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏப்ரல் மாதம் விற்பனையும் சரிந்துள்ளது. ஆனால் டாடா மோட்டர்ஸ் விற்பனை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 74 சதவீதம் அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!
எனவே 2022 ஏப்ரல் மாதம் வாகன விற்பனையில் யார் நம்பர் 1 என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பஜாஜ் அட்டோ
பஜாஜ் அட்டோ ஏப்ரல் மாதம் 3.10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இரண்டு சக்கர வாகன விற்பனை 19 சதவீதம் சரிந்து 2.81 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 3.48 லட்சம் வாகனங்களை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து இருந்தது.
அசோக் லேலண்ட்
அஷோக் லேலண்ட் வாகன விற்பனை 42 சதவீதம் அதிகரித்து 11,847 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,340 வாகனங்களை அஷோக் லேலண்ட் விற்பனை செய்திருந்தது.
மாருதி சுசூகி
ஏப்ரல் மாதம் மாருதி சுசூகி வாகன விற்பனை 7 சதவீதம் சரிந்துள்ளது. 2021-ம் ஆண்டு 1.37 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1.26 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
ஏப்ரல் மாதம் டாடா மோட்டர்ஸ் விற்பனை 74 சதவீதம் அதிகரித்து 72,468 வாகனங்களை விற்றுள்ளது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 39,401 வாகனங்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.
மஹிந்தரா & மஹிந்தரா
மஹிந்தரா டிராக்டர் விற்பனை ஏப்ரல் மாதம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு டிராக்டர் விற்பனை 51 சதவீதம் அதிகரித்து 39,405 ஆக உள்ளது.
ஹூண்டாய் இந்தியா
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 44,001 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு 12,200 வாகனங்களை ஏற்றுமதியும் செய்துள்ளது. இருந்தாலும் ஏப்ரல் மாதம் மொத்தமாக 5 சதவீதம் வரை வாகன விற்பனை சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது.
Tata Motors vs Maruti vs Bajaj Auto — Who is India’s top auto makers in April Sales
Tata Motors vs Maruti vs Bajaj Auto — Who is India’s top auto makers in April Sales