கோபன்ஹேகன்:
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்பு விமானத்தில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை அடைந்தார். மேள தாளங்கள் முழங்க பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
பிரதமர் மோடியை தனது அலுவலகத்துக்குச் அழைத்துச் சென்ற டென்மார்க் பிரதமர் அங்கு விஸ்தாரமாக உள்ள புல்வெளி பரப்பை சுற்றிக்காட்டி அது குறித்து பேசினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வர்த்தகம், அரசியல் என பல்வேறு விஷயங்களில் டென்மார்க்குடனான இரு தரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணவும், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு, பேச்சுவார்த்தை பாதை மற்றும் திட்டத்தை தேர்வு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…சனி கிரகம் அருகே இன்னொரு பூமி- மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்பநிலை