கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே களையிழந்து காணப்பட்ட அட்சய திருதியை , இந்த ஆண்டு திருவிழாக்கோலம் பூண்டுள்ளதை காண முடிகிறது.
நகைகடைகளில் அலைமோதும் கூட்டமே இதற்கு சிறந்த சாட்சியாக இருக்கும்.
அள்ள அள்ள குறையாதது என்பது தான் அட்சயம். ஆக அட்சய திருதியை நாளில் எந்த நல்ல விஷயம் செய்தாலும், அது பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.
மக்களின் நம்பிக்கை
ஆக இந்த நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் இந்த அட்சய திருதியை நாளில் தாங்கள் விரும்பும் பொன்னும் பொருளும் பெருக மக்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் என பலவற்றினையும் வாங்கி வைக்கும் பழக்கம், பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
2 மாத சரிவில் தங்கம் விலை
இதனை ஊக்குவிக்கும் விதமாக கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்து வந்த பொருளாதாரமும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. மேலும் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இரண்டு மாத சரிவில் காணப்படுகின்றது. இது உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இது பிசிகல் தங்கத்தின் விலையிலும் எதிரொலித்துள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க ஊக்குவிக்கலாம். குறிப்பாக அட்சய திருதியை நாளான இன்று குறைந்த விலையானது சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகின்றது.
நிபுணர்களின் கணிப்பு
இது குறித்து கமாடிட்டி மற்றும் கரன்சி நிபுணர் அனுஜ் குப்தா, தங்கம் விலையானது 2 மாத சரிவில் காணப்படுகின்றது. இது முதலீட்டு ரீதியாக மட்டும் அல்ல, பிசிகல் தங்கத்தினையும் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அட்சய திருதியை நாளில் வாங்க சரியான நாள் என்றும் கூறியுள்ளார்.
ஆபரண தங்கம் விலை
இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தையின் எதிரொலியாக, தங்கம் விலையானது சற்று குறைந்துள்ளது. தற்போது சென்னையில் கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து 4816 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 4816 ரூபாய் அதிகரித்து, 38,528 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து, 5254 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 42,032 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 430 ரூபாய் குறைந்து, 52,540 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 0.60 பைசா குறைந்து, 67 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 670 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 67,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
is it right time to invest gold this Akshaya Tritiya? what analysts are says about?
is it right time to invest gold this Akshaya Tritiya? what analysts are says about?/தங்கம் வாங்க இது சரியான தருணமா.. அட்சய திருதி நாளில் என்ன நிலவரம்..!