கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர் – சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக, அவ்வப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை இரண்டு இளைஞர்கள் பைக்கின் முன் சக்கரத்தை தூக்கியவாறு, ஒரே சக்கரத்தில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளனர். அவ்வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.
வாகன பதிவெண்ணைக் கொண்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஒசூரைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்த சூளகிரி போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.