அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத வளாகத்தைச் சுற்றி பேருந்துகளின் மூலம் முற்றுகையிட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரசாரத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.