தமிழகத்தில் அனல் காற்று மற்றும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திர காலம் நாளை தொடங்கி 28 ஆம் தேதி வரை வாட்டி வதைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெயில் உச்சத்தை எட்டிய நிலையில் இன்றும் நாளையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ள நிலையில் சுமார் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் வெப்ப சலனம் காரணமாக தெற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.