நெருக்கடி நிலையில் எவரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில், எவரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (03) காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தரப்பினரும் ,இப்போதைய சூழ்நிலையில் தேர்தலை வலியுறுத்த வில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ,புதிய அரசியலமைப்பு வரைக்காக திரு விஜேயதாச ராஜபக்க்ஷ பாராளுமன்றத்தில் கொண்டுவந்த தனிநபர் பிரேணையை முன்னெடுப்பதற்கு 6 மாத காலம் செல்லும் என்பதினாலேயே இதனை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என திரு விஜேயதாச ராஜபக்க்ஷ  கேட்டுக்கொண்டார்.இதற்கு அமைவாகவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக விசேட நிபுணத்துவக் குழுவை நியமித்துள்ளது.இதற்காக 21 வாரா கால எல்லையையும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக நேற்று நடைபெற்ற விசேட நிபுணத்துவக் குழு தொடர்பான விபரம் வருமாறு:

11.  புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணத்துவக் குழு அறிக்கை

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா அவர்களின் தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 09.09.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இக்குழுவின் ஆரம்ப அறிக்கை 25.04.2022 அன்று மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக கீழ்க்காணும் அமைச்சர்களுடன் கூடிய உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

  • கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள்

வெளிவிவகார அமைச்சர் – (தலைவர்)

  • கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள்

அரச பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

  • கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

கடற்றொழில் அமைச்சர்

  • கௌரவ (வைத்தியர்) ரமேஷ் பத்திரன அவர்கள்

கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

  • கௌரவ அலி சப்ரி அவர்கள்

நிதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்

இதே வேளை பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தற்போது வாழ்க்கை சுமையை எதிர்கொண்டுள்ளனர்.வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு.இதனைக்கருத்திற் கொண்டு அரசாங்கம் பின்வரும் குழுவை அமைச்சரவை நேற்று நியமித்துள்ளது என்றும் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நாலக்க கொடஹேவா மேலும் தெரிவித்தார்.

09.  வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்

வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பங்கேற்புடன் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.