பீகார்: மது அருந்துவதற்காக இறங்கிய டிரைவர்.. ஒரு மணி நேரம் தாமதமான பயணிகள் ரயில்!

பீகாரில் டிரைவர் மது அருந்த இறங்கியதால் சமஸ்திபூரிலிருந்து சஹர்சா சென்ற பயணிகள் ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தின் ஹசன்பூர் ரயில் நிலையத்தில் உதவி ஓட்டுநர் மது அருந்தச் சென்றதால் பயணிகள் ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. சமஸ்திபூரிலிருந்து சஹர்சா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முதலில் கடக்க ஹசன்பூர் நிலையத்தில் சிறிது நேரம் நின்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. இந்த நேரத்தில், ரயிலின் உதவி லோகோ பைலட் (ALP) கரண்வீர் யாதவ் என்ஜினில் இருந்து காணாமல் போனார்.
Passenger train delayed by an hour as driver gets off to have a drink in  Bihar
ரயில் கிளம்புவதற்கான சிக்னல் கொடுத்த போதும் ரயில் நகராததால், நிலைய மாஸ்டர் இது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், ரயில் தாமதமானதால் எரிச்சல் அடைந்த பயணிகள், சலசலப்பை உருவாக்கினர். காணாமல் போன உதவி லோகோ பைலட்டைத் தேட ரயில்வே போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தேடுதல் முயற்சியில் அந்த ஊரிலுள்ள லோக்கல் மார்க்கெட் அருகே நிமிர்ந்து நிற்கக்கூட முடியாத அளவுக்கு போதையில் இருந்த ஏஎல்பியை கண்டுபிடித்தனர்.
Bihar: Passenger train delayed by an hour as driver gets off to have a drink  - India News
இதையடுத்து உதவி லோகோ பைலட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்த கோட்ட ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.