புடின் உக்ரைனை ஊடுருவுவதற்காக அனுப்பிய தனது படைகளில் கால் பகுதியை இழந்துவிட்டதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
உக்ரைனை ஊடுருவுவதற்காக புடின் 120 பட்டாளங்களை அனுப்பியதாகவும், அவற்றில் சுமார் 65 சதவிகிதம் போரிடும் திறனை இழந்துவிட்டதாகவும் உளவுத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவு ஏஜன்சியின் தினசரி அறிக்கையில், உக்ரைன் படைகள் ரஷ்யப் படைகளை வலுவிழக்கச் செய்து, அவர்களுடைய போரிடும் திறனை குறைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சிறப்புப் படைகளில், விமானப்படை உட்பட சில பிரிவுகளில் மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்ய ரஷ்யாவுக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்றும் பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவு ஏஜன்சியின் தினசரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.