ஜேர்மனியும் இந்தியாவும் புலம்பெயர்தல் மற்றும் மாணவர்கள், தொழில் துறையினர் மற்றும் ஆய்வாளர்களை பரஸ்பரம் அனுமதித்தல் ஆகிய விடயங்களுடன் சட்ட விரோத புலம்பெயர்தலைத் தடுத்தல் தொடர்பிலும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.
கல்வியில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
மேலும், மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பிலும் இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதுபோக, இரகசிய தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை நல்குவதென முடிவு செய்துள்ளன.