ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். முன்னதாக 1996-ம் ஆண்டில் இருந்து 2001 வரை தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த காலத்தில் பெண்களின் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன.
கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வாய்ப்பளிக்கப்படும் என தாலிபன்கள் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கக் கூடாது, ஆண் துணையின்றி பயணிக்கக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டன.
மேலும் படிக்க | பெண்கள் விமானத்தில் தனியே பறக்கத் தடை
இந்த நிலையில் பெண்களுக்கு புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டுமென ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகளுக்கு தாலிபன்கள் வாய் வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஃப்கானிஸ்தானில் உள்ள நகரங்களிலேயே முற்போக்கான நகரமாக கருதப்படும் ஹீரட்டில் உள்ள ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகளுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பெண்கள் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெண்கள், இந்த தலைமுறை பெண்களுக்கு கிடைத்த உரிமைகள் கூட அடுத்த தலைமுறை பெண்களுக்குக் கிடைக்கக் கூடாதென தாலிபன்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஆண் வேடம் அணிந்து வெளியே செல்லும் பெண்கள்: ஆப்கானிஸ்தானில் அவல நிலை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR