உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ராணுவ செயற்கைகோளை ரஷ்யா ரகசியமாக விண்ணில் ஏவுயுள்ளது.
கடந்த 30ஆம் தேதி, அந்நாட்டின் பிளெசெட்ஸ்க் காஸ்மோடிரோம் ஏவுதளத்தில் இருந்து அங்காரா-1.2 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ நடவடிக்கைக்காக ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என ரஷ்ய விண்வெளி மையமான ராஸ்காஸ்மாஸ் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்கும் வகையில் ரஷ்யா இந்த செயற்கைக்கோளை ரகசியமாக ஏவியுள்ளதாக கூறப்படுகிறது.