மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயண பாபு விசாரணை செய்தார்.
கல்லூரியின் முதல்வராக இருந்த ரத்தினவேல், துணை முதல்வர் தனலட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணை குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவிக்கையில்,
“முதற்கட்ட விசாரணை நடந்துள்ளது, தேவைப்படும் பட்சத்தில் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்படும். கொரோனாவுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சி என்பதால் அவசர கதியில் தவறு நடந்துள்ளது.
யாரிடமும் ஆலோசிக்காமல் உறுதிமொழி வாசித்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். கல்லூரி முதல்வர், துணை முதல்வரிடம் ஆலோசிக்கவில்லை என மாணவர்கள் கூறினர்.
மருத்துவ கல்லூரிகளில் இப்போகிரேடிக் உறுதிமொழிதான் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. அரசு பரிந்துரைத்தால் மீண்டும் ரத்தினவேலை கல்லூரி முதல்வராக நியமிக்க வாய்ப்புகள் ஏற்படலாம்” என்று மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு விளக்கம் அளித்தார்.